MAIN MENU

Broadband FAQ

1.M3 உயர் கதி இன்ரநெட் என்பது என்ன?
M3 உயர் கதி இன்ரநெட் என்பது நீங்கள் எந்த இடத்தில் இருந்தாலும் 3.5G வலையமைப்பின் கீழே நீங்கள் இடம்பெற்றிருந்தால் மிகப் பாரியளவிலான கோப்புக்களை பெற்றுக்கொள்ளவோ அல்லது அனுப்பவோ இடமளிக்கின்ற ஒரு உயர் கதியுடனான தரவு இணைப்புச் சேவையாகும். M3 உயர் கதி இன்ரநெட் ஆனது HSPA இனால் வலுவூட்டப்பட்டுள்ளது.
2. HSPA என்பது என்ன?
HSPA இசைவாக்கமுடைய சாதனங்களிலே 14.4 Mbps வரையிலான பெற்றுகொள்ளும் மற்றும் 1.98 Mbps வரையிலான அனுப்பும் கதிகளுடன் நீங்கள் தரவினை அடைந்தகொள்வதற்கு இடமளிக்கின்றமற்றும் மற்றும் HSUPA (High Speed Uplink Packet Access) அம்சங்களின் இணைப்பாகும்.
3. நான் வலையமைப்பினுள் நுழைந்துகொண்டுள்ள கணம் முதல் அல்லது உண்மையான தரவுப் பாவனை ஆகிய இரண்டிலே எதற்கு அமைவாக கட்டணத்தை செலுத்த வேண்டி ஏற்படும்?
நீங்கள் வலையமைப்பினுள் நுழைந்துகொண்டு செலவிட்ட நேரத்திலே எவ்வித தொடர்புகளும் இல்லாது உங்களது உண்மையான தரவுப் பாவனைக்குரியதை மட்டுமே நீங்கள் செலுத்தவேண்டும்.
4. தரவுப் பாவனையானது பெற்றுகொள்ளுதல் அல்லது அனுப்புதல் அல்லது அவை இரண்டிற்குமே கணிக்கப்படுகின்றதா?
தரவுப்பாவனையானது பெற்றுகொள்ளுதல் மற்றும் அனுப்புதல் ஆகிய இரண்டிற்குமே கணிக்கப்படுகின்றது.
5. 100MB தரவின் மூலமாக என்னால் எவற்றினை மேற்கொள்ள முடியும்?
உங்களால் அண்ணளவாக 1000 மின்னஞ்சல்களைப் பெற்றுகொள்ள முடியம், 25 பாடல்களை தரவிறக்கம் செய்துகொள்ள முடியும் அல்லது 300 இற்கும் மேற்பட்ட இணையப் பக்கங்களை உசாவ முடியும். (இவை வெறுமனே குறியீட்டு இலக்கங்கள் மட்டுமே. அவற்றின் உண்மையான பெறுமதிகள் மேற்குறிப்பிட்டப்பட்டுள்ள உதாரணங்களுக்கு அமைவாக ஒவ்வொரு அலகினதும் அளவைப்பொறுத்து வேறுபடலாம்). தரவு மாற்றீட்டு அட்டவணை:
8 bits (b) =1 byte (B)
1024 bytes (b) =1 Kilobyte (1 kB)
1024 Kilo bytes (kB) =1 Megabyte (MB)
1024 Mega bytes (MB) =1 Gigabyte (GB)
6. எனது பாவனையை எவ்வாறு சரிபார்த்துக் கொள்வது?
மொபிடெலின் வர்த்தக இணையத்தளத்தின் மூலமாக உங்களுடைய ஒன்லைன் கணக்கினூடாக உங்களுடைய பாவனையை சரிபார்த்துக் கொள்ள முடியும்.
7. எவ்வாறு எனது கணக்கை உருவாக்கிக் கொள்வது?
Account Login இனுள் நுழைந்து அதன் பின்னர் sign up இனை கிளிக் செய்யவும். அதன் பின்னர் செயற்படுத்துவதற்கான குறியீடு உங்களிடம் கோரப்படும். உங்களுடைய சாதனத்திற்கு SMS ஊடாக நீங்கள் பெற்றுகொள்கின்ற செயற்படுத்தல் குறியீட்டை தயவுசெய்து நுழையுங்கள். உங்களுடைய கணக்கிற்காக பதிவுசெய்துகொண்டதன் பின்னரே உங்களுக்கு SMS அனுப்பி வைக்கப்படும். இதனை மேற்கொள்வதிலே உங்களுக்கு மேலதிக உதவிகள் தேவைப்பட்டால் தயவுசெய்து இணையத்தளத்திலே “எனது கணக்கை உருவாக்குவதற்கு உதவி தேவை” என்ற தலைப்பிலே info@mobitel.lk இற்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்புங்கள் அல்லது மொபிடெல் துரித அழைப்பு இலக்கமான 071 275 5777 ஊடாக எம்மை அழையுங்கள். உங்களுடைய கணக்கினை உருவாக்குவதற்கு நாம் உங்களுக்கு உதவுவோம்.
8. HSDPA சாதனங்களின் இசைவாக்கத்திற்காக பிரத்தியேக் கணினி ஒன்றிக்குத் தேவைப்படுகின்ற தொகுதிகள் என்ன?
சாதனத்தின் ஆக்கத்தையும் வகையையும் பொறுத்து தொகுதியின் தேவைகளும் மாறுபடலாம். இன்று பாவனையிலுள்ள அனேகமான மடிகணினிகள் மற்றும் பிரத்தியேக் கணினிகள் இதற்கு இசைவாகின்ற கொள்ளளவைக் கொண்டுள்ளன. பொதுவாக கீழ்வரும் உள்ளிணைப்பைக் கொண்டுள்ள ஒரு பிரத்தியேகக் கணினியானது (மடிகணினி அல்லது மேசைக் கணினி) மேலே குறிப்பிடப்பட்ட தேவைகளைப் பூர்த்திசெய்யக்கூடியது.
  • புரோசசர் 1 GHz அல்லது அதற்கு மேற்பட்டது
  • RAM 512 MB அல்லது அதற்கு மேற்பட்டது
  • Free Space 100MB
  • OS - Windows 2000/XP/Vista
இருப்பினும் மேற்குறிப்பிடப்பட்ட உள்ளிணைப்பானது ஒரு வழிகாட்டல் உபயோகத்திற்கு மட்டுமே உபயோகிக்கப்பட வேண்டியதுடன் நீங்கள் சாதனத்தைக் கொள்வனவு செய்வதற்கு முன்னர் நீங்கள் உபயோகிப்பதற்கு எண்ணியுள்ள கணியினின் தொகுதித் தேவைகளின் இசைவாக்கத்தினை தீர்மானித்து அதன் பின்னர் முடிவினை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றீர்கள். வேறுபட்டதொழிற்பாட்டுத்தொகுதி ஒன்றைக் கொண்டுள்ள (Apple Mac போன்றன) மடிகணினியை அல்லது பிரத்தியேகக் கணினியை நீங்கள் உபயோகித்தால் இசைவாக்கத்திற்காக தயவுசெய்து modem உற்பத்தியாளரது உற்பத்திக் குறிப்புக்களை சரிபார்த்துக் கொள்ளுங்கள்.
9. வலையமைப்புடன் கிடைக்கப்பெறுகின்ற சாதனங்களின் வகைகள் எவை?
. மொபிடெலில் கிடைக்கப்பெறுகின்ற சாதனங்களின் வகைகளையும் அதன் உற்பத்திக் குறிப்புக்களையும் பார்வையிடுவதற்கு தயவுசெய்து கீழுள்ள இணைப்பினைப் பின்பற்றவும்
10. இதனை உபயோகிப்பதற்கு எனது மடிகணினியிலே அல்லது மேசைக் கணினியிலே விசேட மென்பொருள் எதையாவது உள்ளிணைக்க வேண்டுமா?
ஆம். அனேகமான USB சாதனங்கள் உள்ளிணைக்கப்பட்ட மென்பொருளைக் கொண்டிருப்பதுடன், முதற் தடவை பாவிக்கப்படும் போது தன்னியக்கமாகவே உள்ளிணைப்பை ஏற்படுத்திக் கொள்கின்றன. உபயோகிப்பதற்கு முன்னர் தயவுசெய்து சாதன உற்பத்தியாளரது அறிவுறுத்தல்களை கவனத்தில் கொள்ளுங்கள். மேலதிக தொழில்நுட்பவியல் விபரங்களுக்கு தயவுசெய்து மேம்பட்ட “வழமையாக எழக்கூடிய வினாக்கள்" வழமையாக எழக்கூடிய வினாக்கள்” பகுதியை நாடுங்கள்.

Looking for...

Broadband FAQs