MAIN MENU

Prepaid Roaming

1. எனது சிம் அட்டையில் எவ்வாறு ரோமிங் வசதியைத் தொழிற்படுத்திக் கொள்வது?
முற்கொடுப்பனவுத் திட்டத்தின் கீழுள்ள ஒவ்வொரு சிம் அட்டையும் ஏற்கனவே ரோமிங் தொழிற்படுத்தப்பட்டவை.மேலதிக வைப்புக்கள் எதுவும் தேவையற்றவை.
ஏற்கவே முற்கொடுப்பனவுத்திட்ட வாடிக்கையாளர்களாக உள்ளவர்கள் தமது இலக்கத்திலிருந்து மிக இலகுவாக மொபிடெலுக்கு அழைப்பை ஏற்படுத்தி ரோமிங்கினை தொழிற்படுத்த முடிவதுடன் அது இலவசமாக மேற்கொள்ளப்படும்
2. எவ்வாறு மீள்நிரப்புவது?
நீங்கள் பின்வரும் வழிகளில் மீள்நிரப்பு செய்யலாம்:
• முகவர் இடங்களில் மீள்நிரப்பு
• வவுச்சர் மீள்நிரப்பு - *102* பிரத்தியேக அடையாள இலக்கம் # இனை டயல் செய்து OK இனை அழுத்தவும்
• மொபிடெல் இணையத்தளத்தின் (www.mobitel.lk) மூலம் மேற்கொள்ளப்படுகின்ற கடனட்டைக் கொடுப்பனவு (வீசா மற்றும் மாஸ்டர் அட்டைகள் மட்டும்)
• நீங்கள் ரோமிங் செய்கின்ற சமயத்தில் உங்களுடைய கணக்கில் மேலும் மீதியை சேர்க்க விரும்பினால் உங்களுடைய சார்பில் உள்நாட்டிலுள்ள நபர் ஒருவர் அதனை விற்பனை முகவர் மூலம் மேற்கொள்ள முடியும்
3. நான் ரோமிங் செய்யும் போது எனது கணக்கு நிலுவையை எவ்வாறு சரிபார்த்துக் கொள்வது?
எளிதாக *100# இனை டயல் செய்யவும்
4. முற்கொடுப்பனவுத் திட்டத்தின் கீழுள்ள ஒருவர் ரோமிங் செய்கின்ற போது அழைப்பொன்றை மேற்கொண்டதன் பின்னர் USSD செய்தி மூலம் கிடைக்கப்பெறுகின்ற மீதியை அவர் பெற்றுக்கொள்ள முடியுமா?
ஆம்.
5. ரோமிங் செய்பவர்கள் வாடிக்கையாளர் சேவையினை எவ்வாறு தொடர்பு கொள்வது?
+94 714 555 555 என்ற மொபிடெல் ரோமிங் துரித அழைப்பு இலக்கத்தை அழையுங்கள் அல்லது +94 712 755 777 என்ற மொபிடெல் துரித அழைப்பு இலக்கத்தை அழையுங்கள்.

Looking for...

Prepaid FAQs