MAIN MENU
எவ்வாறு மீள்நிரப்புவது?

ஒன்லைன், வங்கி மூலமாக, விற்பனை நிலையங்களிலே மற்றும் இன்னும் பல வழிகளிலே மீள்நிரப்புவதற்கான ஏராளமான தெரிவுகளை மொபிடெல் உங்களுக்கு வழங்குகின்றது. உங்களுடைய மொபிடெல் முற்கொடுப்பனவுத் திட்ட இலக்கத்திற்கு மீள்நிரப்பை மேற்கொள்வதற்காக மீள்நிரப்பு அட்டைகளை உபயோகியுங்கள் அல்லது நாடெங்கிலும் அனேகமான சில்லறை விற்பனை நிலையங்களிலே கிடைக்கப் பெறுகின்ற இலத்திரனியல் மீள்நிரப்பு முறையினை உபயோகியுங்கள்.

மீள்நிரப்பு
காலம்
ரூபா.50 20 தினங்கள்
ரூபா.100 90 தினங்கள்
ரூபா.350 220 தினங்கள்
ரூபா.500 260 தினங்கள்
ரூபா.1000 365 தினங்கள்

 

 
eமீள்நிரப்பு
காலம்
ரூபா. 20 - ரூபா. 49.99 7 தினங்கள்
ரூபா.50 - ரூபா.74.99
20 தினங்கள்
ரூபா.75 - ரூபா.99.99 60 தினங்கள்
ரூபா.100 - ரூபா.149.99 90 தினங்கள்
ரூபா.150 - ரூபா.199.99 150 தினங்கள்
ரூபா.200 - ரூபா.349.99 180 தினங்கள்
ரூபா.350 - ரூபா.499.99 220 தினங்கள்
ரூபா.500 - ரூபா.649.99 260 தினங்கள்
ரூபா.650 - ரூபா.899.99 330 தினங்கள்
ரூபா.900ம் அதற்கு மேலும் 365 தினங்கள்

 

எங்கிருந்தும் எப்போதும்

எனது கணக்கிலே உங்களது கடனட்டையை உபயோகிப்பதனை பதிவுசெய்த பின்னர் இலத்திரனியல் உடனடி மீள்நிரப்பு வசதியை உபயோகித்து எந்த வேளையிலும் உலகின் எந்தப் பகுதியில் இருந்தும் உங்களுடைய மொபிடெல் இலக்கத்திற்கு மீள்நிரப்பை மேற்கொள்ளுங்கள்.

  • எனது கணக்கினுள் நுழைந்து கொள்வதற்கு Login இற்குச் செல்லவும் .

  • புதிய ஒரு ‘எனது கணக்கினை‘ உருவாக்குவதற்கு Register ற்குச் செல்லவும்.

 

வெளிநாட்டில் இருந்து மீள்நிரப்பு செய்யுங்கள்.

வெளிநாட்டில் இருந்து கொண்டே இலங்கையிலுள்ள உங்கள் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் மீள்நிரப்பு செய்யுங்கள்.

Recharge World Café

மீள்நிரப்பு அட்டையை உபயோகித்து மீள்நிரப்புதல்
சுய பராமரிப்பு இலக்கமான 141 இனை அழையுங்கள் 
  • உங்களுடைய தொலைபேசியூடாக 141 இனை அழைத்து குரல் பதிவினை செவிமடுக்கவும்
  • தற்போது 2 இனை அழுத்தவும்
  • அறிவுறுத்தல்களைப் பின்பற்றி 14 இலக்க குறியை (PIN) அழுத்தவும்
  • பின்னர் # பட்டனை அழுத்தவும்
USSD சுருக்கக் குறி
  • *102* இனை அழுத்தவும்
  • பின்னர் 14 இலக்க குறியை (PIN) அழுத்தி அதன் பின்னர் # பட்டனை அழுத்தவும்
  • இறுதியாக தொலைபேசியிலே "OK" அல்லது "SEND" அல்லது "CALL" பட்டனை அழுத்தவும்

உதாரணத்திற்கு *102*XXXXXXXXXXXXXX# என அழைக்கவும்

உங்களுடைய தொலைபேசி அல்லது USB Modem இலிருந்து SMS செய்யவும்
  • உங்களுடைய தொலைபேசியின் மூலமாக 14 இலக்க குறியை (PIN) 141 இற்கு SMS செய்யவும் அல்லது
  • 14 இலக்க குறி (PIN) எண், நீங்கள் மீள்நிரப்பு செய்ய விரும்புகின்ற மொபிடெல் இலக்கத்தினை டைப் செய்து
  • மற்றுமொரு மொபிடெல் தொலைபேசியில் இருந்து 141 இற்கு SMS செய்யவும்
உதாரணத்திற்கு 0712345678 என்ற மொபைல் இலக்கத்திற்கு நீங்கள் மீள்நிரப்பு செய்ய வேண்டுமெனில், XXXXXXXXXXXXXX#0712345678 என 141 இற்கு SMS செய்யுங்கள்

Looking for...