MAIN MENU

Business FAQ

1. ஒரு புதிய இணைப்பை எவ்வாறு பெற்றுக்கொள்வது?
Big M's மற்றும் அவற்றின் கிளைகளிலுள்ள மொபிடெல் கருமபீடங்கள், மொபிடெலின் அங்கீகரிக்கப்பட்ட கொடுப்பனவு நிலையங்கள், ஸ்ரீலங்கா ரெலிக்கொம் ரெலிஷொப்புக்களிலுள்ள மொபிடெல் கருமபீடங்கள், ஸ்ரீலங்கா ரெலிக்கொம் பிராந்திய தொலைதொடர்பாடல் அலுவலகங்களிலுள்ள மொபிடெல் கருமபீடங்கள் மற்றும் சிங்கர் மெகா காட்சியறைகளிலுள்ள மொபிடெல் கருமபீடங்கள்.
2. எனது கடன் எல்லையை எவ்வாறு அதிகரித்துக் கொள்வது?
பிற்கொடுப்பனவுத் திட்ட இணைப்பைக் கொண்டுள்ள உங்களது ஆரம்ப கடன் எல்லையானது மீளளிக்கப்படக்கூடிய வைப்பின் தொகைக்கு சமனானது எவ்வாறெனினும் பின்வரும் வழிகள் மூலமாக கடன் எல்லையை அதிகரித்துக் கொள்ள முடியும்:
இணைப்பிற்கான சந்தாவைப் பெற்றுக்கொள்ளும் வேளையிலோ அல்லது அதன் பின்னரோ மேலதிக வைப்பொன்றை (மீளளிக்கப்படக்கூடிய) பேணுதல்
கடந்த 3 மாதங்களுக்கான பின்வரும் நிதியியல் கூற்றுக்களில் ஒன்றை வழங்குதல்: நடைமுறைக் கணக்குக் கூற்று, சம்பளத் தாள், கடனட்டைக் கூற்று, உங்களுடைய இதற்கு முந்திய சேவை வழங்குனரின் கடைசி 3 மொபைல் கட்டணப் பட்டியல்கள்.
மொபிடெல் பிரதான காரியாலயம், மொபிடெல் Big M கிளைகள், மொபிடெலின் அங்கீகரிக்கப்பட்ட கொடுப்பனவு நிலையங்கள், சிங்கர் மெகா காட்சியறைகளிலுள்ள மொபிடெல் கருமபீடங்கள், ஸ்ரீலங்கா ரெலிக்கொம் ரெலிஷொப்புக்களிலுள்ள மொபிடெல் கருமபீடங்கள் ஆகிய இடங்களிலே கடன் எல்லை மேம்பாடுகளை செயற்படுத்த முடியும். கடன் எல்லை மேம்படுத்தல் விண்ணப்பதை தரவிறக்கம் செய்து கொள்ளுதல்.
3. எனது பாவனை மற்றும் கணக்கு நிலுவையை எவ்வாறு அறிந்து கொள்வது?
நீங்கள் 1456 இனை டயல் செய்ய முடியும், USAGE என 4567 இற்கு SMS செய்ய முடியும், அல்லது உங்களுடைய பாவனை மற்றும் கணக்கு நிலுவை தொடர்பாக உங்களுடைய மொபைலிலே My Mobitel விபரச்சட்டத்தினூடாக SMS ஒன்றைப் பெற்றுக்கொள்வதற்கான தெரிவை மேற்கொள்ளவும் முடியும்.
4. எனது முதலாவது பட்டியலுக்கான வாடகை எவ்வாறு கணிக்கப்படுகின்றது?

advanceதெரிவுசெய்யப்பட்ட பக்கேஜ்களிலே வாடகையானது இணைப்பைப் பெற்றுக்கொண்ட திகதியிலிருந்து உங்களுடைய பட்டியல் திகதி வரைக்குமான காலப்பகுதியுடன், ஒரு மாத வாடகையும் முற்பணமாகச் சேர்த்து அறவிடப்படும்ற்றும் உங்களுடைய கட்டணப் பட்டியல் திகதி 20/1/2006 எனில் தெரிவுசெய்யப்பட்ட பக்கேஜ்களிலே வாடகையானது இணைப்பைப் பெற்றுக்கொண்ட திகதியிலிருந்து உங்களுடைய பட்டியல் திகதி வரைக்குமான காலப்பகுதியுடன், ஒரு மாத வாடகையும் முற்பணமாகச் சேர்த்து அறவிடப்படும்.
உதாரணத்திற்கு,
உங்களுடைய ACTIVE 300 இணைப்பை நீங்கள் பெற்றுக்கொண்ட திகதி 5/1/2006 மற்றும் உங்களுடைய கட்டணப் பட்டியல் திகதி 20/1/2006 எனில்.
பின்வரும் வழியிலே உங்களது வாடகை கணிக்கப்படும்:

குறிப்பிட்ட நாட்களுக்கான வாடகை - 05/01/2006 முதல் 19/01/2006 வரை
= ரூபா.300/30 x 15 தினங்கள்
= ரூபா.150
ஒரு மாத வாடகை முற்பணம் -20/01/2006 முதல் 19/02/2006 வரை = ரூபா.300
அறவிடப்படும் மொத்த வாடகை
= ரூபா.150 + ரூபா.300
= ரூபா.450
5. பட்டியல் கொடுப்பனவு முடிவுத் திகதி எது?
பட்டியல் கொடுப்பனவு முடிவுத் திகதியானது பட்டியல் தயாரிக்கப்பட்ட திகதியில் இருந்து 14 தினங்களாகும்.
6. எனது பட்டியல்களுக்கான கொடுப்பனவை எங்கே மேற்கொள்ள முடியும்?
பின்வரும் இடங்களிலே உங்களது மாதாந்த பட்டியலுக்கான கொடுப்பனவுகளைச் செலுத்த முடியும்:
மொபிடெல் பிரதான நிலையம்
அனுபவ நிலையம்
மொபிடெல் கிளைகள்
ஸ்ரீலங்கா ரெலிக்கொம்
ஸ்ரீலங்கா ரெலிக்கொம் பிராந்திய தொலைதொடர்பாடல்
சிங்கர் மெகா காட்சியறை
சிங்கர் பிளஸ் காட்சியறைகளிலுள்ள மொபிடெல் கருமபீடங்கள்/ சிங்கர் சிசில் காட்சியறைகள் மற்றும் மொடேர்ன் ஹோம்ஸ்
அங்கீகரிக்கப்பட்ட வங்கிகள்
கீல்ஸ் சுப்பர்
கொடுப்பனவுகள் – சம்பத் வங்கி, கொமர்ஷல் வங்கி, ஹட்டன் நஷனல் வங்கி மற்றும் HSBC வங்கி ஆகிய வங்கிகளிலே கணக்குகளை வைத்திருப்பவர்கள் தங்களுடைய மொபிடெல் பட்டியலுக்கான கொடுப்பனவுகளை மேற்கொள்ள SMS பட்டியல் கொடுப்பனவு சேவையை உபயோகிக்க முடியும்.

* கொடுப்பனவுகள் ஒன்லைன் ரீதியிலே கணக்கிலே பதிவு வைக்கப்பட மாட்டாது
7. எனது பட்டியலுக்கான மன்னிப்புக் காலம் என்ன?
உங்களுடைய பட்டியல் நிலுவையாக உள்ள தொகையானது கடன் எல்லையை மீறுகின்ற சமயத்திலே வெளிச்செல்லும் அழைப்புக்கள் துண்டிக்கப்படும்.அதன் பின்னர் 3 தினங்களிலே இணைப்புதற்காலிகமாகதுண்டிக்கப்படுவதுடன் 30 தினங்களின் பின்னர் முற்றாகவே செயற்பாடுகள் இடைநிறுத்தப்படும்.
8. எனது இணைப்பு தற்காலிகமாக துண்டிக்கப்பட்டாலோ அல்லது செயற்பாடுகள் முற்றாகவே இடைநிறுத்தப்பட்டாலோ மேற்கொள்ளவேண்டிய வழிமுறைகள் என்ன?
உங்களுடைய இணைப்பு தற்காலிகமாக துண்டிக்கப்பட்டால் நிலுவையாகவுள்ள உங்களது பட்டியல்களுக்கான கொடுப்பனவை மேற்கொள்ளவேண்டி இருப்பதுடன், நிலுவையாக உள்ள தொகையானது உங்களது கடன் எல்லையை விடவும் குறைவாக உள்ளது என்பதை உறுதிசெய்து கொள்ளுங்கள். உங்களுடைய இணைப்பு முற்றாகவே இடைநிறுத்தப்பட்டால் மொத்த நிலுவையானது செலுத்தப்படவேண்டி உள்ளதுடன் மீளிணைப்பைப் பெற்றுக்கொள்வதற்கு தேசிய அடையாள அட்டையைச் சமர்ப்பிக்க வேண்டும்.
9. My Best Friend, Friends & Family மற்றும் Any8 இற்காக பிரேரிக்கப்பட்டுள்ள இலக்கங்களை என்னால் மாற்றிக்கொள்ள முடியுமா?
ஆம். 30 தினங்களுக்கு ஒரு தடவை பிரேரிக்கப்பட்ட இலக்கங்களை மாற்றிக்கொள்ள முடியும். தயவுசெய்து எழுத்து மூலமான உங்களது விண்ணப்பத்தை மொபிடெல் பிரதான காரியாலயம், மொபிடெல் கிளைகள், சிங்கர் மெகா தொலைநகல் மூலமாக அனுப்பி வையுங்கள். மிக இலகுவாக SMS ஒன்றை Friends & Family and Any8 numbers by simply sending an SMSView Activation Codes
10. எனது பக்கேஜ் இனை மாற்றிக் கொள்ள முடியுமா?
ஆம், நீங்கள் ஒரு பிற்கொடுப்பனவுத் திட்டத்தின் கீழுள்ள பாவனையாளர் எனில் நீங்கள் செய்யவேண்டியது உங்களுடைய புதிய கட்டணத்திட்டப் பக்கேஜினைக் குறிப்பிட்டு ஒரு திருத்தம் செய்யும் படிவத்தைப் பூர்த்தி செய்யவேண்டியது மட்டுமே.
11. நான் பக்கேஜின் உரிமையைக் கைமாற்றிக் கொள்வது எப்படி?
அங்கீகாரத்திற்கான கடிதம் ஒன்றை எங்களிடம் கையளிப்பதன் மூலமாக உங்களது இணைப்பின் உரிமையை நீங்கள் விஜயஞ்செய்ய முடியும்:
  • புதிய பாவனையாளரின் பெயரின் கீழுள்ள பட்டியல் முகவரி நிரூபணம்
  • உங்கள் வைப்புத்தொகையை நீங்கள் மாற்றாடின் ஆகக் குறைந்தது ரூபா 1500 இணைப்பின் வைப்புத்தொகையாக அறவி
  • உரிமையை மாற்றுவதற்கான கட்டணம் ரூபா 500/-
  • இருவரது அடையாள அட்டையினது பிரதிகள்
Please visit Big M’s and branches;Mobitel authorized payment centers, Mobitel@ Singer Mega and Mobitel@ SLT Teleshops.
12. எனது சிம் அட்டை தொலைந்துவிட்டது/சேதமடைந்துள்ளது. நான் என்ன செய்ய முடியும்?
உங்களுடைய சிம் அட்டையினை மீளப் பெற்றுக்கொள்வதற்கு தயவுசெய்து Big M விற்பனை நிலையங்கள், சிங்கர் மெகா காட்சியறைகளிலுள்ள மொபிடெல் கருமபீடங்கள் அல்லது மொபிடெலின் அங்கீகரிக்கப்பட்ட கொடுப்பனவு நிலையங்களுக்கு விஜயஞ் செய்யுங்கள்.
Charges will apply.
13. நான் மொபிடெல் பிற்கொடுப்பனவுத் திட்டத்தின் கீழுள்ள ஒரு வாடிக்கையாளர். 3G Daily Delight மற்றும் 3G Weekly Delight இனை என்னால் உபயோகிக்க முடியுமா?
ஆகியன மொபிடெல் முற்கொடுப்பனவுத் திட்டத்தின் கீழுள்ள வாடிக்கையாளர்களுக்கெனபிரத்தியேகமாகக் கிடைக்கப்பெறுகின்ற தெரிவுகளாகும். அதனால் உங்களுடைய பிற்கொடுப்பனவுத் திட்ட இணைப்பிலே நீங்கள் 3G Delight இனை செயற்படுத்த முடியாது. எவ்வாறெனினும் நீங்கள் HSDPA modem அல்லது HSDPA உள்ளிணைக்கப்பட்ட மடிகணினி ஒன்றை வைத்திருந்தால் நீங்கள் ஒன்றைக் கொள்வனவு செய்தால் 3G Delight அம்சங்களை அனுபவித்து மகிழ முடியும்

 

Looking for...

Business FAQs