MAIN MENU

அழைப்புக்களை முகாமைத்துவம் செய்ய வேண்டியதற்கான உங்களது தேவைகளை மொபிடெலிலே நாம் சரியாகப் புரிந்து கொண்டுளோம். அழைப்பினை காத்திருக்க வைப்பது, மாற்றுவது, தடுப்பது மற்றும் இன்னும் பல அம்சங்களுடன் உங்களது அழைப்புக்கள் தொடர்பாக நீங்கள் எவற்றை செய்ய விரும்புகின்றீர்கள்: உங்களுக்குத் தேவைப்படுகின்ற சேவைகள் அனைத்தையும் மொபிடெல் உங்களுக்கு வழங்குகின்றது

அழைப்பிலே தொடர்ந்தும் இருத்தல்

சில வேளைகளிலே ஒரே நேரத்திலேயே இரு முக்கியமான அழைப்புக்களை நீங்கள் பெற்றுக்கொள்கின்ற சந்தர்ப்பங்கள் எழலாம். அந்த வேளையிலே தற்போது நீங்கள் இணைப்பில் இருக்கின்ற அழைப்பைத் துண்டிக்காமலேயே இரண்டாவது அழைப்பிற்கு நீங்கள் பதிலளிக்க விரும்பலாம். இரண்டாவது அழைப்பிற்குப் பதிலளிப்பதற்காக முதலாவது அழைப்பிலுள்ளவரை நீங்கள் “அழைப்பிலே தொடர்ந்தும் இருத்தல்” வசதியைப்   பயன்படுத்தி தொடர்ந்தும் அழைப்பிலே காத்திருக்கச் செய்ய முடியும் “அழைப்பிலே தொடர்ந்தும் இருத்தல்” வசதியானது நீங்கள் மற்றைய அழைப்பாளருடன் தொடர்பினை ஏற்படுத்தும் வரை அவரை இணைப்பிலே தொடர்ந்தும் வைத்திருப்பதற்கு உதவுகின்றது.

தற்போது நீங்கள் இணைப்பிலுள்ள அழைப்பைத் துண்டிக்காது அழைப்பிலே தொடர்ந்தும் காத்திருக்கச் செய்வதற்கு உங்களுடைய மொபைல் தொலைபேசியிலே இலக்கம் 2 இனை டயல் செய்யுங்கள்.

ஒருபோதும் அழைப்புக்களைத் தவறவிடாதீர்கள்

அழைப்பிலே காத்திருக்கும் வசதியானது நீங்கள் ஏற்கனவே ஒரு அழைப்பிலே உள்ள வேளையிலே உள்வருகின்ற இரண்டாவது அழைப்பொன்றிற்கு பதிலளிக்கும் வாய்ப்பை உங்களுக்கு வழங்குகின்றது. இதன் காரணமாக முக்கியமான அழைப்புக்களை நீங்கள் தவறவிடாமல் பதிலளிக்க முடிகின்றது. 

செயற்படுத்துவதற்கு --> *43# இனை டயல் செய்யவும்
செயற்பாட்டை நிறுத்துவதற்கு --> #43# இனை டயல் செய்யவும்

ஒரே நேரத்திலே நீங்கள் விரும்புகின்ற பல பேருடன் பேச முடிகின்றது

மாநாட்டு அழைப்பொன்றை மேற்கொள்வதற்கு:
 
  1. முதலாவது இலக்கத்தை டயல் செய்யவும்
  2. இணைப்பு பெறப்பட்டவுடன் அதனை காத்திருக்கும் தெரிவிற்கு மாற்றுங்கள்
  3. இரண்டாவது இலக்கத்தை டயல் செய்து மீண்டும் அதனை காத்திருக்கும் தெரிவிற்கு மாற்றுங்கள்
  4. இன்னும் அதிகாமானோரை இணைத்துக் கொள்வதற்கு இரண்டாவது மற்றும் மூன்றாவது படிமுறைகளை தொடர்ந்தும் செய்யவும்
  5. அனைத்து அழைப்பாளர்களையும் மாநாட்டிலே ஒன்றிணைப்பதற்கு 3 இனை அழுத்தவும்

30 வரையிலான வேண்டப்படாத உள்வரும் இலக்கங்களை தடை செய்யுங்கள்.

உங்களுடைய மொபிடெல் SMART முற்கொடுப்பனவை உபயோகித்துக் கொள்ளுங்கள்.
Call Block இனை செயற்படுத்துவதற்கு 2565 இற்கு SMS ஒன்றை அனுப்புங்கள் அல்லது சுய பராமரிப்பு விபரச்சட்டத்தை அடைந்து கொள்வதற்காக உங்களுடைய கையுபகரணத்தின் மூலமாக #888# இனை அழையுங்கள்.
 
செய்கை 2565 இற்கு SMS
அழைப்பைத் தடை செய்வதனைச் செயற்படுத்துவற்காக YESCB
தடை செய்யப்பட்ட அழைப்பவர் பட்டியலில் இலக்கம் ஒன்றைச் சேர்ப்பதற்கு ADD <இலக்கம்>
தடை செய்யப்பட்ட அழைப்பவர் பட்டியலில் உள்ள இலக்கம் ஒன்றை நீக்குவதற்கு  RM <இலக்கம்>
தடை செய்யப்பட்ட அழைப்பவர் பட்டியலில் உள்ள இலக்கங்களைப் பார்ப்பதற்கு CB
அழைப்பைத் தடை செய்யும் அம்சத்திற்குரிய SMS குறியீடுகளைப் பெற்றுக்கொள்வதற்கு INFO
அழைப்பைத் தடை செய்யும் தொழிற்பாட்டை ரத்துச் செய்வதற்காக NOCB

சுய பராமரிப்பு விபரச்சட்டம் #888#

உங்களுடைய கையுபகரணத்திலே #888# இனை டயல் செய்த பின்னர் தெரிவு 2 இனுள் நுழைந்து (செயற்படுத்தல் மற்றும் செயற்பாட்டை ரத்துச் செய்தல்) தெரிவு 5 இனை தெரிவு செய்யவும் (அழைப்பைத் தடை செய்தல்).

கட்டணங்கள்

  • செயற்படுத்துவதற்கான கட்டணம் ரூபா. 10 மற்றும் தினசரிக் கட்டணம் ரூபா.
  • கட்டணங்கள் அரசாங்க வரிகள் மற்றும் தீர்வைகளுக்கு உட்பட்டவை.
  • There will be no additional charges to modify numbers in the blocked caller list.
அழைப்பவரை இனங்காணுதல்

உங்களை அழைக்கும் நபரினது இலக்கத்தை நீங்கள் பார்க்க முடியும். அழைப்பவரை இனங்கண்டு கொள்கின்ற தெரிவானது உங்களுக்கு அந்த அழைப்பிற்கு பதிலளிப்பதா வேணடாமா என்ற தீர்மானத்தை மேற்கொள்ள உதவுகின்றது அந்த அழைப்பானது வெளிநாடுகளில் அல்லது pay phone தொலைபேசிக்கூடம் ஒன்றிலிருந்து எடுக்கப்பட்டால் இலக்கம் தோன்றாமல் விடலாம் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்

தவறவிடப்பட்ட அழைப்புகள் தொடர்பான உசார்படுத்தல் (MCA)

ஒவ்வொரு தடவை நீங்கள் அழைப்பொன்றைத் தவறவிடுகின்ற போதும் SMS மூலமான அறிவிப்புக்கள் கிடைக்கப்பெறுகின்றன. நீங்கள் தவறவிட்ட அழைப்புக்களுக்கான பதில் அழைப்பை ஏற்படுத்திக்கொள்ள இது உங்களுக்கு உதவுகின்றது.

செயற்படுத்துவதற்கு --> MCA என 7676 இற்கு SMS அனுப்பவும்
செயற்பாட்டை நிறுத்துவதற்கு --> MCA DCT என 7676 இற்கு SMS அனுப்பவும்

நீங்கள் இடையூறு செய்யப்படாமல் இருக்க விரும்பினால்

நீங்கள் இடையூறு செய்யப்படாமல் இருக்க விரும்பினாலோ அல்லது மின்கலத்தில் போதியளவு வலு இல்லாத சமயத்திலோ அல்லது வலையமைப்புப் பிரதேசத்திற்கு வெளியில் செல்ல வேண்டி நேர்ந்தாலோ ஆனால் உள்வரும் எந்த அழைப்புக்களையும் தவறவிடாமல் பெற்றுக்கொள்ள விரும்பினால் அழைப்பினை மாற்றுதல் (Call Forward) தெரிவை உபயோகியுங்கள். உங்களது உள்வரும் அழைப்புக்கள் அனைத்தையும் நிலையான இணைப்பு அல்லது மொபைல் இணைப்பு என வேறு ஒரு இலக்கத்திற்கு மாற்றுவதன் மூலமாக வேறு ஒருவர் அவற்றிற்கு பதிலளிக்க முடியும்.

எல்லா வேளைகளிலும் அனைத்து அழைப்புக்களையும் மாற்றுவதற்கு

  • *21* நீங்கள் உங்களது அழைப்புக்களை மாற்ற விரும்புகின்ற இலக்கம் # என்றவாறு டயல் செய்யவும்
  • Settings -> Call settings -> Call Forward -> Voice calls ->Forward Always ->Forward to -> Number என்ற வழிமுறையைப் பின்பற்றவும்

மற்றுமொரு அழைப்பிலே உள்ளபோது உள்வருகின்ற அனைத்து அழைப்புக்களையும் மாற்றுவதற்கு

  • *67* நீங்கள் உங்களது அழைப்புக்களை மாற்ற விரும்புகின்ற இலக்கம் # என்றவாறு டயல் செய்யவும்

உதாரணத்திற்கு, *67*0714090446#

பதில் கிடைக்கப்பெறாத சமயங்களிலே அனைத்து அழைப்புக்களையும் மாற்றுவதற்கு

  • *61* நீங்கள் உங்களது அழைப்புக்களை மாற்ற விரும்புகின்ற இலக்கம் # என்றவாறு டயல் செய்யவும்

உதாரணத்திற்கு, *61*0714090446#

நீங்கள் செயற்படுத்திய மாற்றங்களை சரிபார்ப்பதற்கு

  • *#21# or *#67#  or  *#61# என்றவாறு டயல் செய்யவும்

நீங்கள் செயற்படுத்திய மாற்றங்களை ரத்து செய்வதற்கு

  • ##002# என்றவாறு டயல் செய்யவும்
Say it as you mean it

Dial *(star)<mobile/land line number>
(e.g. *071XXXXXXX)

To retrieve a message:
Mobitel: Dial 852
Other: Message will be sent as a call

Charges
M2M: Rs. 0.50 + Taxes
M2O: Rs. 1.00 + Taxes

Looking for...