MAIN MENU

Mobitel Overview

ABOUT MOBITEL
 
மொபிடெல் இலங்கையின் தேசிய மொபைல் சேவைகள் வழங்குனராகும். 2002 ஆம் ஆண்டில் ஸ்ரீலங்கா ரெலிக்கொம் நிறுவனத்தால் கொள்வனவு செய்யப்பட்ட மொபிடெல் தடைகளையும் சவால்களையும் கடந்து பாரிய வளர்ச்சி பெற்றுள்ளதுடன் இலங்கை தொலைதொடர்பாடல்கள் தொழிற்துறையில் மிகப் பிந்திய தொழில்நுட்பத்திற்கு இணையாக திகழ்கின்றது. தெற்காசியாவில் அதிசிறந்த 3.5G HSPA தொழில்நுட்பத்தை முதன் முதலில் ஆரம்பித்த மொபைல் தொழிற்பாட்டளராக மொபிடெல் திகழ்கின்றது.
 
'புத்தாக்கத்துடனான பெறுமதி’ என்ற மூலோபாயத்துடன் மொபிடெல் வாடிக்கையாளர்கள் எப்போதும் வெற்றியாளர்களே. தொழில்நுட்பமானது நிறுவனத்தின் தரப்பில் மட்டும் வெற்றியளிப்பதுடன் நின்றுவிடாது வாடிக்கையாளரை முன்னிலைப்படுத்திய நிறுவன கலாச்சாரமொன்றை நோக்கமாகக் கொண்டு அதனை வளர்த்தெடுக்கவேண்டும் என நாம் நம்புகின்றோம். இந்த கொள்கையானது மொபிடெல் செயற்படும் பாணியாக அமைந்துள்ளதுடன் அது எமது வாடிக்கையாளர்களுடன் நீண்டகாலம் நீடிக்கின்ற உறவுமுறைகளைக் கட்டியெழுப்ப எமக்கு இடமளிக்கின்றது. 2005 மற்றும் 2006 ஆண்டிற்கிடையில் ஏற்பட்ட 100% வாடிக்கையாளர் எண்ணிக்கை வளர்ச்சி அதற்கு சிறந்த சான்று பகர்கின்றது. நாம் “எப்பொழுதும் அக்கறை கொண்டுள்ளதால்” நாம் வழங்குகின்ற புத்தாக்கம்மிக்க திட்டங்களில் உட்கட்டமைக்கப்பட்டுள்ள அம்சங்களும், பயன்களும் எமது வாடிக்கையாளர்களின் நலன் மீதான மிகுந்த அவதானத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளன. சாதனைமிகுந்த பெறுபேறுகளை நாம் அடைந்துகொள்ள அது எமக்கு இடமளித்துள்ளது.
 
மொபிடெல் தற்போது ‘தேசிய’ மொபைல் சேவை வழங்குனர் என்ற தனித்துவமான ஸ்தானத்தில் தற்போது திகழ்வதுடன் மொபைல் தொலைபேசித் துறையின் முன்னோடியாகவும் அதனை உயர்த்தியுள்ளது. இந்த ஸ்தானத்திலிருந்து எமது பார்வையில் மிக முக்கிய நபராக உள்ள எமது வாடிக்கையாளருக்கு இன்னும் அதிகமான பெறுமதிகளை தொடர்ந்தும் வழங்குவோம்

 

Looking for...