MAIN MENU

mTAXI FOR CUSTOMERS

mTaxi சேவையானது Mobitel ஆல் மேம்படுத்தப்பட்ட நவீன தீர்வாகும். இது எமது எந்தவொரு பெறுமதிமிக்க வாடிக்கையாளராலும் அணுகக்கூடியதுமாகும்.

நீங்கள் 0710 712 712 ஐ அழைக்கும் போது , உங்கள் அழைப்பு மிக அருகில் உள்ள வாடகை வண்டிக்கு மேல் செலுத்தப்படும். வாடகை வண்டி சாரதி உங்கள் அழைப்புக்கு பதிலளிக்காவிடில் , அது அடுத்து மிக அருகிலுள்ள வாடகை வண்டிக்கு தன்னியக்கமாக நேராக செலுத்தப்படும். வாடகை வண்டி சாரதி ஒருவருடன் அழைப்பு இணைக்கப்படும் போது , வாடிக்கையாளர் சாரதியுடன் தொடர்புகொண்டு வாடகை சம்பந்தமான தகவல்களை தெரிவிக்கலாம் . ஆரம்ப அழைப்பு துண்டிக்கப்பட்ட பின்னரும் வாடிக்கையாளர் சில எளிய அறிவுறுத்துதல்களை பின்பற்றுவதன் மூலம் இறுதியாக அழைத்த  வாடகை வண்டியுடன் தொடர்பு கொள்ளலாம்.

mTaxi சேவையை பாவித்து 
 
  • உங்கள் முற்கொடுப்பனவு அல்லது பிர்கொடுப்பனவு தொலைபேசி மூலம் நாட்டின் எங்கிருந்தும் 0710 712 712 ஐ அழைக்கவும் 
  • ஒலி வழிகாட்டி சேவையை செவிமடுத்து அறிவுறுத்துதல்களை பின்பற்றவும் 
  • உங்கள் இடத்தை உறுதி செய்யவும். உறுதிபடுத்திய பின்னர் , நீங்கள் உங்களுக்கு மிக அருகிலுள்ள வாடகை வண்டி தரிப்பிடத்திற்கு நெறிப்படுத்தப்படுவீர்கள் அத்துடன் சாரதி உங்களுடன் உரையாடி பயணம் தொடர்பான தகவல்களை பெறுவார் 
  • வாடகைக்கான தகவல்கள் உறுதி செய்யப்பட்ட பின்னர் , நீங்கள் உங்கள் சரியான இடத்தை சாரதிக்கு தெரிவிக்கலாம்.
  • நீங்கள் உரையாடிய சாரதியுடன் மீண்டும் தொடர்பு கொள்ள விரும்பினால் , mTaxi சேவை உங்களுக்கு மீண்டும் அழைப்பதற்கான வசதியை தருகிறது. அத்துடன் தொகுதி நீங்கள் முன்னர் பாவித்த வாடகை வண்டிகள் தொடர்பான தகவல்களையும் பெற வழியமைக்கின்றது.

mTaxi சேவை 

  • நாடுமுழுவதுமுள்ள வாடகை வண்டிகளுக்கான தனியான ஒரேயொரு hotline ஆகும் 
  • நீங்கள் பல வாடகை வண்டிகளுக்கான இலக்கங்களை ஞாபகத்தில் வைத்திருக்க வேண்டியதில்லை 
  • நீங்கள் பல வாடகை வண்டி சேவைகளுக்கு அழைப்பை மேற்கொள்ள வேண்டியதில்லை 
  • இது நம்பிக்கயானதும் நேரத்தை மிகுதியாக்கக்கூடியதுமான சேவையாகும் 
  • உங்களை உங்களுக்கு மிக அருகிலுள்ள வாடகை வண்டிகளுக்கான தரிப்பிடத்துடன் இணைக்கும் 
  • உங்கள் தொலைபேசி இலக்கம் வாடகை வண்டி சாரதிக்கு காட்சி தருவதை உறுதி செய்யும்.

சாரதிகளுக்கான mTAXI

mTAXI சேவையானது பிரதானமாக வாடிக்கையாளர்களை வாடகை வண்டி சாரதிகளுடன் இணைப்பதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. mTAXI சேவையுடன் பதிவு செய்யப்பட்டுள்ள சாரதிகள் mTAXI பாவனையாளர்களிடமிருந்து வரும் வாடகைகளுக்கான அழைப்பை பெறுவர். இது அவர்களது வியாபாரத்தை விருத்தி செய்ய உதவும்.

நான்  எவ்வாறு mTaxi சேவையுடன் பதிவு செய்யலாம் ?

  • நாட்டிலுள்ள எந்தவொரு Mobitel  online தொடுகை புள்ளிக்காவது வருகை தரவும் 
  • உங்கள் தேசிய அடையாள அட்டை, சாரதி அடையாள அட்டை மற்றும் வருமான சான்றிதழ் ஆகியவற்றின் பிரதிகளை வாழங்கவும் 
  • நீங்கள் தேவையான ஆவணங்களை சமர்பித்தபின் , நீங்கள் Mobitel முற்கொடுப்பனவு இணைபொன்றை இலவசமாக பெறக்கூடியதுடன் mTaxi சேவையுடன் பதிவு செய்யலாம் 

mTaxi சேவை எவ்வாறு எனக்கு பயனுடையதாகும் ?

  • நீங்கள் அதிக எண்ணிக்கையான வாடகைகளை பெறலாம்.
  • உங்கள் இலக்கம் வாடிக்கையாளருக்கு தெரியப்படுத்தப்பட மாட்டாது அத்துடன் மறுதலையாகவும்.
  • mTaxi சேவை உங்களுக்கு இலவச விளம்பரத்தை பெற்று தரும்.

புகையிரத பயணச்சீட்டு ஒதுக்கீடு:

 

எந்நேரமும் எவ்விடத்திற்கும் கடுகதி புகையிரத பயணச்சீட்டு ஒதுக்கீட் டிற்காக எந்தவொரு முற்கொடுப்பனவு அல்லது பிற்கொடுப்பனவு இணைப்பின்மூலமாகவும் Mobitel நுழைவுச்சீட்டு ஓதிக்கீட்டு சேவையை 365 இன் மூலம் அழைக்கவும். 

  • கண்டி கொழும்பு கடுகதி ரயில் 
  • வவுனியா  கடுகதி ரயில்
  • வவுனியா இரவு அஞ்சல்  
  • யாழ் தேவி
  • பதுளை இரவு அஞ்சல்  
  • உடரட்ட மெனிக்கே 
  • பொடி மெனிக்கே

'ராஜதானி எக்ஸ்பிரஸ்' புகையிரத பெட்டி :

 

'ராஜதானி எக்ஸ்பிரஸ்'  புகையிரத பெட்டி  WIFI, தொலைக்காட்சி வசதிகள் , Laptop power outlets, உணவு போன்ற  பல நவீன வசதிகளையும் செளகரியங்களையும் வழங்குகின்றது.

  • கண்டி கொழும்பு கடுகதி ரயில் 

Mobitel  புகையிரத பயணச்சீட்டு ஒதுக்கீடு செயன்முறை:

 

  • நுழைவுச்சீட்டு ஓதிக்கீட்டு சேவையை   365 ஐ அழைப்பதன் மூலம் அணுகவும் ice.
  • உங்கள் பெயர் , தேசிய அடையாள அட்டை இலக்கம் , இடங்கள் குறித்த தகவல்கள் மற்றும் பயணச்சீட்டுகளின் எண்ணிக்கை ஆகியவற்றை தெரிவிக்கவும் .
  • நீங்கள் ஒரு குறிப்பு இலக்கத்தை பெறுவீர்கள். 
  • ஒதுக்கீடு  தகல்கள் SMS மூலம் உறுதி செய்யப்படும்.
  • உங்கள் பயணச்சீட்டுகளை எந்தவொரு Mobitel நிலையத்திலும் , கோட்டை புகையிரத நிலையத்தில் உள்ள விசேட சேவை முகப்பில் , கொழும்பு , கம்பஹா , பேராதனை , கண்டி புகையிரத நிலையங்களில் பெற்றுக்கொள்ளலாம். 

பயணச்சீட்டு  பெறும் படிமுறை:

 

Mobitel வாடிக்கையாளர்கள் அவர்களது பயணச்சீட்டை எந்தவொரு Mobitel கிளையிலோ அல்லது பயணச்சீட்டு அச்சிடுவதற்கான நடைமுறையிலுள்ள எந்த ஒரு இடத்திலோ அச்சிட்டு பெறலாம். 

சிறப்பம்சம்:

 

24 மணி நேர அணுகல் , வாரிசைகளில்லை, பயணிக்க தேவையில்லை .
கட்டணங்கள் 

Charges

 

சிக்கனம் புகையிரத பெட்டி கட்டணங்கள் பயணச்சீட்டு  கட்டணம் + சேவை கட்டணம்  + வரி
அழைப்பு கட்டணம் (365) ஒரு நிமிடத்திற்கு ரூ .8 + வரி 

குறும் குறியீட்டு கட்டணம் பயணச்சீட்டு  கட்டணம் மற்றும் ஒதுக்கீட்டு கட்டணம் ஆகியவை ஒவ்வொரு வெற்றிகரமான ஒதுக்கீட்டிற்கும் அறவிடப்படும்  இக் கட்டணங்கள் உங்கள் பட்டோயளுடன் சேர்க்கப்படும்.

 

 

mGuide:

உங்களுக்கு இலங்கயின் செழிப்பான பாரம்பரிய உரிமைகளையும் வரலாற்றையும்  ஆழமாக ஆராய உதவுவதன் மூலமாகவும், நாட்டில் பரந்துள்ள மிக பிரபலமான வரலாற்று தளங்களின் பாரம்பரிய முக்கியத்துவங்கள் தொடர்பாக ஆழ்ந்த அறிவை வழங்குவதன் மூலமாகவும் MobitelmGuide உங்களுக்கு இலங்கயின் உண்மையான அழகை சுற்றிப்பார்க்கக் கூடிய ஆற்றலை வழங்குகின்றது.

உங்கள் Mobitel  தொலைபேசி மூலம் இலங்கையை சுற்றிப்பாருங்கள். இலங்கை முழுதும் பரந்துள்ள நூற்றுக்கணக்கான பாரம்பரிய, வரலாற்று முக்கியத்துவமிக்க இடங்களையும் இயற்கை அழகையும்  உங்களுக்கு அறிமுகப்படுத்திக் கொள்ளுங்கள். 

 

வரலாற்று முக்கியத்துவமிக்க இடங்கள் தொடர்பாக தகவல்களை பெற  888 ஐ அழையுங்கள்

 

அழைப்பு கட்டணம் 

ஒரு நிமிடத்திற்கு ரூ . 4 +  வரி.

Looking for...