MAIN MENU

Internet Security

இலவச அன்டி-வைரஸ் பாதுகாப்பு மற்றும் உங்களுடைய மொபைல் தொலைபேசியிலே நீங்கள் அனுமதிக்கின்ற இணைய உள்ளடக்கத்தை வடிகட்டும் தெரிவு ஆகிய இரு அம்சங்கள் தொடர்பாக  இன்ரநெட்டிலே உங்களுக்குத் தேவைப்படுகின்ற அனைத்துப் பாதுகாப்பையும் மொபிடெல் மூலமாக நீங்கள் உறுதிசெய்துகொள்ள முடியும்

இணைய உள்ளடக்க வடிகட்டல் மற்றும் அன்டி-வைரஸ் பாதுகாப்பு

தற்போது எமது இணைய உள்ளடக்க வடிகட்டல் ஊடாக நீங்களும், உங்கள் குடும்பத்தவர்களும் அடைந்துகொள்கின்ற இணையத்தளங்களை கட்டுப்படுத்த முடியும். அனைத்து பிற்கட்டண மற்றும் முற்கட்டண குரல் மற்றும் புரோட்பான்ட் பாவனையாளர்களுக்கும் இது கிடைக்கப்பெறுகின்றது. இணைய உள்ளடக்க வடிகட்டலை இலவசமாகப் பெற்றுகொள்வதற்கு உங்களுக்கு அருகாமையிலுள்ள மொபிடெல் விற்பனை நிலையத்திற்கு விஜயஞ்செய்யுங்கள்

eவெவ்sவேறுபட்ட அடைதல் மட்டங்களுடன் இரு பக்கேஜ்கள் கிடைக்கப்பெறுகின்றன:
1 மாணவருக்கான பக்கேஜ்–மாணவர் பக்கேஜ் திட்டத்தின் கீழுள்ள பாவனையாளர் ஒருவர் வயதுவந்தவர்களுக்கான உள்ளடக்கங்களை அடையும் வழியைக் கொண்டிருக்க மாட்டார்.Student package - A Student policy user will not have access to adult content.

2 குடும்பத்தினருக்கான பக்கேஜ்–குடும்ப பக்கேஜ் திட்டத்தின் கீழுள்ள பாவனையாளர் ஒருவர் வயதுவந்தவர்களுக்கான உள்ளடக்கங்களை அடையும் வழி தானாகவே தடைசெய்யப்பட்டிருக்கும். எனினும் அடிப்படைப் பாவனையாளருக்கு நாம் பாவனைப்பெயர் ஒன்றையும், இரகசியக் குறியீட்டையும் வழங்குவோம். அதன் மூலமாக அந்தப் பாவனையாளர் அந்த விபரங்ளை உபயோகித்து தடைசெய்யப்படாத எந்தவொரு இன்ரநெட் உள்ளடக்கங்களையும் அடைந்துகொள்ள முடியும்

இரகசியக் குறியீட்டை முகாமைத்துவம் செய்தல்
நீங்கள் மின்னஞ்சல் மூலமாக பெற்றுக்கொண்ட இரகசியக் குறியீட்டை மாற்ற விரும்பினாலோ அல்லது உங்களது இரகசியக்குறியீட்டை நினைவு கொள்ளமுடியாத வேளைகளிலே அதை மாற்ற விரும்பினாலோ தயவுசெய்து இரகசியக் குறியீட்டை மாற்றுதல் இற்குச் செல்லவும். நீங்கள் பதிவுசெய்துகொண்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு உங்களுடைய புதிய இரகசியக் குறியீட்டை நாம் அனுப்பி வைப்போம்

Looking for...