MAIN MENU

Postpaid Roaming

1. எனது சிம் அட்டையில் ரோமிங்கினை எவ்வாறு தொழிற்படுத்துவது?
உங்களது கடவுச்சீட்டு மற்றும் தேவைப்படுகின்ற வைப்புத் தொகையுடன் மொபிடெல் தலைமை அலுவலகத்திற்கோ அல்லது எந்தவொரு மொபிடெல் கிளைக்கோ செல்லுங்கள். இணைப்பு நிறுவனம் ஒன்றின் பெயரின் கீழ் இருக்கும் பட்சத்தில் நிறுவனத்தின் கடிதம் தேவைப்படுகின்றது.
2. . நான் மேற்கொள்ள வேண்டிய வைப்புத் தொகை எவ்வளவு?
ரோமிங் செய்வதற்கான மீளளிக்கப்படக்கூடிய வைப்புத் தொகை தற்போது ரூபா. 25,000/- (அனைத்து நாடுகளுக்கும்)
3. வைப்பினை எந்த வடிவத்தில் மேற்கொள்வது?
• பணம்
• வங்கி உத்தரவாதம்
• கடனட்டை மூலமான கொடுப்பனவு
4. எனது வைப்பினை மீளப்பெற்றுக் கொள்வதற்கு எவ்வளவு காலம் காத்திருக்க வேண்டும்?
காத்திருக்க வேண்டும்? இரு கட்டணப்பட்டியல் சக்கரங்களின் பின்னர், உங்களுடைய பட்டியலின் மொத்த தொகையையும் உங்கள் கணக்கின் தற்போதைய பாவனையையும் கொடுப்பனவு செய்த பின்னர் உங்களது வைப்புத் தொகை மீளளிக்கப்படும்.
5. ‘தாயகத்தை அழைப்பது’ என்றால் என்ன?
ரோமிங் செய்யும்போது குறைவான கட்டணங்களில் இலங்கைக்கு அழைப்பினை மேற்கொள்வதாகும்.
அழை *140*94இலக்கம்#
உ-ம்:
*140*94712755777# (மொபைல் இணைப்பு) *140*94112330550# (நிலையான இணைப்பு)
6. 'SMS Home' இனை உபயோகித்து எவ்வாறு செய்தியை அனுப்புது?
டயல் *123* <பெற்றுக்கொள்பவரின் இலக்கம்> #
உ-ம்: *123* 0712778880#
SMS HOME செய்திகளுக்கான கட்டணங்கள்;
ஒவ்வொரு SMS HOME செய்திக்கும் ரூபா 5 வீதம் அறவிடப்படும்
7. எனது ரோமிங் பாவனைக்கு எல்லை எதுவும் உண்டா?
ஆம். உங்களது மீளளிக்கப்படக்கூடிய வைப்புத்தொகையில் 75% இனை நீங்கள் எட்டினால் மொபிடெலின் வாடிக்கையாளர் சேவை அதிகாரி ஒருவர் உங்களுக்கு அதனை அறியத்தருவார். இலங்கையில் நீங்கள் தொடர்புகொள்பவரை உடனடியாக அதற்கான கொடுப்பனவை செலுத்துமாறு நீங்கள் கோர முடியும். வைப்புக்கள் எதுவுமற்ற வாடிக்கையாளர்களுக்கு அதனை அங்கீகரித்த நபரால் கடன் எல்லை ஒன்று நிர்ணயிக்கப்படும்)
8. ரோமிங் செய்யும் வேளைகளில் இணைப்பில் தடங்கல் ஏற்பட்டால் நான் என்ன செய்யவேண்டும்?
• கடன் கட்டுப்பாட்டுப் பிரிவினால் கோரப்படுகின்ற வைப்புத்தொகையை எந்தவொரு மொபிடெல் கிளையிலும் மேற்கொள்ளும் படி உள்நாட்டில் உங்களுடன் தொடர்பில் உள்ளவரைக் கோர முடியும். அதன் பின்னர் மீளிணைப்புச் செய்யப்படும்.
அல்லது, • உங்களது கடனட்டை மூலம் வைப்பினை அதிகரித்து மீளிணைப்பை வழங்குமாறு நீங்கள் மொபிடெலை கோர முடியும்.
9. எனது தொலைபேசி தொலைந்து போனால் என்ன செய்ய வேண்டும்?
அந்த சிம் அட்டையின் மூலம் மேற்கொள்ளப்படும் அனைத்து அழைப்புக்களுக்கும் நீங்கள் பொறுப்பாளியாக இருப்பதால் உடனடியாக மொபிடெலை தொடர்புகொள்ளவும்.
10. ரோமிங் செய்யும் வேளைகளில் எனது பாவனையை எவ்வாறு சரிபார்த்துக் கொள்வது?
மிக இலகுவாக Mobitel Services Menu * My Mobitel * Mobi Services * Acc Balance என்ற ஒழுங்கைப் பின்பற்றவும்.
வலையமைப்புக்கள் பாவனை தொடர்பான தகவலை மொபிடெலிற்கு அனுப்புவதில் தாமதங்கள் ஏற்படக்கூடியதால் உங்களது மீதி 100% துல்லியமாக அமையாது என்பதை தயவுசெய்து கவனத்தில் கொள்ளவும்.
11. ரோமிங் தொடர்பான விபரமான பட்டியல் எனக்குக் கிடைக்கப் பெறுமா?
ஆம். விபரமான பட்டியலை நீங்கள் கட்டணம் எதுவுமின்றி கோர முடியும்.
12. ரோமிங் செய்யும் போது எனது மொபிடெல் பெறுமதி சேர் சேவைகளை நான் பயன்படுத்த முடியுமா?
நீங்கள் ரோமிங் செய்யும் போது SMS அடிப்படையிலான பெறுமதி சேர் சேவைகளை மட்டும் நீங்கள் உபயோகிக்க முடியும். ஆனால் ரோமிங் கட்டணங்கள் அறவிடப்படுவதுடன் நீங்கள் ரோமிங் செய்கின்ற வலையமைப்பிற்கேற்ப கட்டணங்கள் மாறுபடும்.
13. ரோமிங் செய்யும்போது எனக்கு பிரச்சனைகள் ஏதும் ஏற்பட்டால் யாரைத் தொடர்பு கொள்வது?
மொபிடெல் ரோமிங் துரித அழைப்பு இலக்கமான +94 714 555 555 இனை அல்லது மொபிடெல் வாடிக்கையாளர் சேவை இலக்கமான +94 712 755 777 இனை தொடர்பு கொள்ளவும்.
14. நான் செல்லவுள்ள நகரத்தை குறிப்பிட்ட ஒரு வலையமைப்பு உள்ளடக்குகின்றதா மற்றும் நான் ரோமிங் செய்யவுள்ள நாட்டில் எனது தொலைபேசி தொழிற்பாட்டு இசைவாக்கம் உடையதா ஆகியவற்றை எவ்வாறு அறிந்துகொள்வது?
தகவலைப் பெற்றுக்கொள்வதற்கு மொபிடெல் ரோமிங் துரித அழைப்பு இலக்கமான +94 714 555 555 இனை நீங்கள் தொடர்பு கொள்ள முடியும்.
15. வெளிநாட்டில் உள்ள போது திரையில் அழைப்பவரது இலக்கத்தை என்னால் கண்டு கொள்ள முடியுமா?
அழைப்பவரது இலக்க குறிகாட்டி சர்வதேச அளவில் பரிமாறப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்ட ஒன்றல்ல. ஆகவே நீங்கள் ரோமிங் செய்யும் எல்லா நேரங்களிலும் உங்களை அழைப்பவரது இலக்கத்தை கண்டுகொள்ள முடியாது. எவ்வாறெனினும் குறிப்பிட்ட சில வலையமைப்புக்கள் அந்த வசதியை வழங்குகின்றன.
16. ரோமிங் செய்யும் போது என்னால் SMS இனை உபயோகிக்க முடியுமா?
ஆம்.
17. ரோமிங் செய்யும் போது என்னால் GPRS இனை உபயோகிக்க முடியுமா?
ஆம், தேசியளவில் GPRS இசைவாக்கமுள்ள அனைத்து சிம் அட்டைகளும் ரோமிங் செய்யும் போது எமது GPRS ரோமிங் வலையமைப்புக்களில் அதனை உபயோகிக்க முடியும்.
GPRS ரோமிங் நாடுகளின் பட்டியலைப் பார்க்கவும்.
18. ரோமிங் செய்யும் போது குறிப்பான தொலைபேசி உபகரணம் தொடர்பான தேவை உள்ளதா?
சில நாடுகள் வேறுபட்ட தொகுதிகளில் தங்கியுள்ளமையால் வேறுபட்ட தொலைபேசி உபகரணங்களுக்கான தேவைகள் எழலாம்.
அதற்கு இசைவாக்கமுடைய தொலைபேசியை வாடகைக்கு எடுப்பது அந்த நாடுகளின் விமான நிலையத்தில் கிடைக்கப் பெறுகின்றது.
உதாரணத்திற்கு:
• ஐக்கிய அமெரிக்கா / கனடா - Tri-band
• ஜப்பான் / கொரியா - 3G (WCDMA)

Looking for...

Post paid