MAIN MENU

3G - Miscellaneous

1.எனது சந்தா செயற்படுத்தப்பட்டுள்ளது என்பதை நான் எவ்வாறு அறிந்து கொள்வது?
குறும் இலக்க குறியீட்டை டயல் செய்வதனால் 3G Delight செயற்படுத்தப்பட்டிருந்தால் உங்களுடைய சந்தாவை உறுதிப்படுத்தி எழுத்து வடிவிலான (SMS) ஒன்றை நீங்கள் பெற்றுக்கொள்வீர்கள். 141 இனை அழைப்பதன் மூலமாக 3G Delight செயற்படுத்தப்பட்டிருந்தால் உங்களுடைய சந்தாவை உறுதிப்படுத்திய குரல் ரீதியாக பதிவுசெய்யப்பட்ட உறுதிப்படுத்தல் ஒன்றை நீங்கள் செவிமடுப்பீர்கள்.
2. எனது தகைமைக்கு அமைவான 50 MB, 100 MB அல்லது 200 MB இனை எனது பாவனை எல்லை மேல்மீறும் போது என்ன நேருகின்றது?
வழமையான முற்கொடுப்பனவுத் திட்ட புரோட்பான்ட் கட்டண வீதமான kB ஒன்றிற்கு ரூபா 0.01 என்ற அடிப்படையிலே நீங்கள் புரோட்பான்டை அடைந்துகொள்ள முடிகின்றது. நீங்கள் விரும்பினால் தேவைப்படுகின்ற குறும் இலக்க குறியீடுகளை டயல் செய்வதன் மூலமாகவோ அல்லது 141 இனை அழைப்பதன் மூலமாகவோ அம்சத்தை மீளவும் செயற்படுத்தி 3G Delight இனது செல்லுபடிக் காலத்தை நீங்கள் நீட்டிப்பு செய்துகொள்ள முடியும்
3.ஒரே தினத்திலேயே 3G Delight இனைப் பெற்றுக்கொள்வதற்கு நான் ஒன்றிற்கு மேற்பட்ட தடவைகள் செயற்படுத்தல்களை மேற்கொள்ள முடியுமா?
ஆம். உங்களுடைய SMART கணக்கிலே போதிய மீதி உள்ள வரைக்கும் நீங்கள் விரும்பும் எத்தனை தடவையும் 3G Delight இனை செயற்படுத்திக் கொள்ள முடியும்
4.எனது இலவச தரவு எல்லை பூர்த்தியாவதை நான் எவ்வாறு அறிந்துகொள்வது?
உங்களுடைய இலவச தரவு எல்லை 90% இனை எட்டும் போது நீங்கள் SMS ஒன்றைப் பெற்றுக் கொள்வீர்கள். அத்துடன் இலவச தரவு எல்லை முற்றாக தீர்ந்துபோகும் சமயத்திலே வேறான SMS ஒன்றையும் நீங்கள் பெற்றுக்கொள்வீர்கள்
8.தரவுப் பாவனையானது பெற்றுக்கொள்ளல் அல்லது அனுப்புதல் அல்லது அவை இரண்டிற்கும் சேர்த்தே கணிக்கப்படுகின்றதா?
பெற்றுக்கொள்ளல் மற்றும் அனுப்புதல் ஆகிய இரண்டையும் சேர்த்தே தரவுப் பாவனை கணிக்கப்படுகின்றது.
9. 100 MB தரவினை வைத்துக்கொண்டு நான் என்ன செய்ய முடியும்?
அண்ணளவாக 1000 மின்னஞ்சல்களைப் பெற்றுக்கொள்ளல், 25 பாடல்களை தரவிறக்கம் செய்தல் அல்லது 300 இற்கும் மேற்பட்ட இணையப் பக்கங்களை உசாவுதல் ஆகியவற்றினை நீங்கள் மேற்கொள்ள முடியும். (இவை எழுந்தமான எண்ணிகைகள் மட்டுமே. ஒவ்வொன்றினதும் அளவைப் பொறுத்து மேற்குறிப்பிடப்பட்ட உதாரணத்தில் விளக்கப்பட்டுள்ளவாறு உண்மையான எண்ணிக்கைகள் மாறுபடலாம்)

Looking for...

Prepaid FAQs