MAIN MENU

Mobitel Coverage

இலங்கையின் ‘தேசிய’ மொபைல் சேவை வழங்குனரான மொபிடெல் நாடெங்கிலுமுள்ள தற்போதைய மற்றும் எதிர்காலத்தில் இணையவுள்ள பெறுமதிமிக்க வாடிக்கையாளர்களுக்கு தொடர்ச்சியான இணைப்பையும் தெளிவையும் வழங்குவதற்காக பாரிய நகரங்கள் அனைத்திலும் தனது சேவை வலையமைப்பை தொடர்ச்சியாக விஸ்தரித்து வருகின்றது. எமது சேவையை ஆரம்பித்து மிகவும் குறுகிய 18 மாதங்களுக்குள் 2005 ஆகஸ்டில் எமது 300 ஆவது தள நிலையத்தை பூர்த்தி செய்ததன் மூலம் இலங்கையில் மிகவும் விரைவாக அமுல்படுத்தப்பட்ட GSM வலையமைப்பாக நாம் மாறியிருந்தோம்.

எமது வலையமைப்பின் கொள்ளளவை அதிகரிக்கும் ஈடுபாட்டுடன் புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவன் ஊடாக மொபிடெல் மேம்பட்ட தீர்வுகளை விநியோகிக்கின்றது. 2009 முதற் காலாண்டின் நிறைவில் எமது தளநிலையங்களை 2000 ஆக அதிகரிக்கும் பாதையில் நாம் பயணிக்கின்றோம். நாடெங்கிலும் நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற புதிய தள நிலையங்களுடன் நாம் இன்னும் அதிகமான இடங்களை எட்டி இலங்கையில் ஆகக்கூடுதலான வலையமைப்புடன் தரமான சேவைகளை மொபிடெல் வழங்க வழிகோலுகின்றது.

கொழும்பிலிருந்து மட்டக்களப்பு வரையும் யாழ்ப்பாணத்திலிருந்து காலி வரையும் நாம் எமது வலையமைப்பை விஸ்தரித்துள்ளோம்.

மொபிடெல் வலையமைப்பு உள்ளடக்க வரைபடங்கள்

மொபிடெல்GSM வலையமைப்பு வரைபடம்
மொபிடெல்3.5G வலையமைப்பு வரைபடம்
மொபிடெல் 4G வலையமைப்பு வரைபடம்

 

Looking for...